மீ டூ சொல்லும் அளவுக்கு வளரவில்லை; அளவுகோல் நிர்ணயிக்கும் நடிகை

ஹாலிவுட்டில் மீடூ விவகாரம் கடந்த ஒரு வருடத்துக்கு முன் வெடித்தது. பின்னர் அந்த விவகாரம் பாலிவுட்டிற்கு வந்தது. நடிகை தனுஸ்ரீ தத்தா இப்பிரச்னையை கிளப்பிவிட்டார். இந்தி நடிகர், இயக்குனர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் கூறினார். இதையடுத்து பல நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பேசத் தொடங்கினர். கோலிவுட்டிலும் பல நடிகைகள் மீடூ விவகாரத்தை அம்பலப்படுத்தினார்கள்.

இதுகுறித்து இந்தி நடிகை கஜோல் கூறும்போது, ’மீடூ பிரச்னை பேசப்பட்டது பெண்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருக்கிறது. பெண்களிடம் பேச வரும் ஆண்கள் தற்போது ஒரு இடைவெளியை கடைபிடிக்கிறார்கள்’ என்றார்.

மகேஷ்பாபு தமிழ், தெலுங்கில் நடித்த பரத் எனும் நான் படத்தில் கதாநாயகியாக நடித்த கியாரா அத்வானி, மீடூ பற்றி கூறி உள்ளார். அவர் கூறும்போது,’மீடு குறித்து பேசும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை. அதற்கு நான் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். மீடு விவகாரம் வெளிப்பட்டதன் மூலம் பெண்கள் தன்னம்பிக்கை பெற்றிருக்கிறார்கள். அது வெற்றிகரமானதாக மாற இன்னும் சில காலம் தேவைப்படும்’ என்றார்.

Related Stories: