×

அஜித், ஆர்யா வரிசையில் பிரியாணி வழங்கிய ஹரிஷ் கல்யாண்!

தமிழ் சினிமாவில் பிரியாணி என்றாலே அஜித்தான் நினைவுக்கு வருவார். படப்பிடிப்புகளில் திடீர் திடீரென தானே சமைத்த பிரியாணியை படக்குழுவினருடன் பகிர்ந்து கொள்வார். ஆர்யாவும் வீட்டில் இருந்து பிரியாணி தயார் செய்து எடுத்து வருவதுண்டு. இப்போது ஹரிஷ் கல்யாணும் அஜித், ஆர்யா வரிசையில் இணைகிறார்.

பிரியா பவானி சங்கரோடு அவர் இணைந்து நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு எந்தப் பிரச்சினையுமில்லாமல் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து மொத்த படக்குழுவுக்கும் பிரியாணி விருந்து போட்டு அசத்தியிருக்கிறார் என்று படத்தின் இயக்குநர் கார்த்திக் சுந்தர் மகிழ்ச்சியாகக் கூறினார்.“ஒரு தரமான படம் அது எடுக்கப்படும்போதே அதன் பாதிப்பை சுற்றத்தில் ஏற்படுத்திவிடும் என்பார்கள்.

எங்களின் படப்பிடிப்பில் அது முற்றிலும் உண்மையானது. படப்பிடிப்பு முழுதுமே உற்சாகமாக,  உணவு,  கொண்டாட்டம், துள்ளல் என நிரம்பியிருந்தது. மேலும் அவர் நகைச்சுவையாக ‘இப்படத்தால் எங்கள் படக்குழுவில் பலர் உணவுப்பிரியர்களாக மாறிவிட்டனர். மேலும் சிலர் உணவுக்கென தனி வலைத்தளம் Youtube தளம் ஆரம்பித்து விட்டனர்' என்றார்.

ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் இருவருமே தங்கள் நடிப்புத் தொழிலில் மிகவும் நேர்த்தியைக் கொண்டிருப்பவர்கள். சினிமா மீது காதல் கொண்டு அர்ப்பணிப்புடன் உழைப்பவர்கள். ஹரிஷ் கல்யாண் கொண்டிருக்கும் பிம்பமானது  எந்தவித கஷ்டமும் இல்லாமல் எளிதில் சாக்லெட் பாய் அவதாரம் எடுத்துவிடக்கூடியது. ஆனால் அவர் தன் தளத்திலிருந்து வெளிவந்து முற்றிலும் புதிதான அவதாரத்தை முயன்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இது ரொமான்ஸ் காமெடி படம் என்றாலும் எல்லோர் வீட்டிலும் உலவும் கனவுகளை துரத்தும் நம் வீட்டுப் பையன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். நாயகி பாத்திரத்திற்கு  குறிக்கோள்கள் கொண்ட, தன்னம்பிக்கை மிக்க எழுச்சியான பெண் தேவைப்பட்டது. ப்ரியா பவானி சங்கர் வெகு எளிதாக இக்கதாபாத்திரத்தை செய்துவிட்டார். தமிழ் பேசும் நாயகியுடன் வேலை செய்வது, எந்த ஒரு தமிழ் இயக்குநருக்கும் சந்தோஷம் தரும்.

ப்ரியா பவானி சங்கருடன் வேலை செய்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. பல உயரங்களுக்குச் செல்லும் திறமை கொண்டவர் அவர். படத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு படப்பிடிப்பின் போதே டப்பிங் பணிகள் செய்யப்பட்டுவிட்டன. தற்போது உடனடியாக போஸ்ட்புரடக்‌ஷன் பணிகள் துவங்கவுள்ளன. ஃபர்ஸ்ட் லுக் பற்றிய அறிவிப்பு மிக விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். படத்தை கோடை கால விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்றார் கார்த்திக் சுந்தர். இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்க கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார்.

Tags : Harish Kalyan ,Priyani for Ajith ,Arya ,
× RELATED அரசு பஸ் டிரைவருடன் தகராறு...