×

கராத்தே பெண்ணை கவர்ச்சி குதிரையாக்கிய இயக்குனர்

இயக்குனர் ராம் கோபால் வர்மா சர்ச்சைக்களுக்கு பெயர் போனவர் மட்டுமல்ல ரங்கீலா, சத்யா போன்ற கமர்ஷியல் படம், ஜிஎஸ்டி என்ற அடெல்ட் படத்தையும் இயக்கியிருக்கிறார். வர்மா தீவிர புருஸ்லி ரசிகர். அவரது ஞாபகார்த்தமாக சீன கம்பெனி, சீன நடிகர்களுடன் இணைந்து, ‘என்டர் தி கேர்ள் டிராகன்’ என்ற முதல் மார்ஷல் ஆர்ட் படத்தை இயக்குகிறார்.

இதற்காக புருஸ்லி ரசிகையும், கராத்தே பயிற்சியில் தேர்ச்சி பெற்றவருமான கட்டுமஸ்தான 26 வயது பெண் பூஜா பஹேலேகர் என்பவரை ஹீரோயினாக்கியிருக்கிறார்.

வெள்ளை குதிரையை பின்னால் ஓடவிட்டு அதற்கு முன்பாக அரேபிய குதிரைபோல் படுகவர்ச்சியாக பூஜா ஓடும் காட்சியுடன் புருஸ்லி பாணியில் அவர் டூ பீஸ் உடைகளுடன் கராத்தே சண்டைபோடும் காட்சிகளையும் கொண்ட டீஸர் ஒன்றை வர்மா வெளியிட்டிருக்கிறார். அத்துடன் பாய்பிரண் டுடன் அவர் டாப்லெஸ் தோற்றத்துடன் லிப் டு லிப் கிஸ் கொடுக்கும் கிளுகிளு காட்சியையும் டீஸரில் இடம்பெறச் செய்திருக்கிறார் வர்மா.

Tags : karate girl ,
× RELATED 5 வருடங்களுக்கு பிறகு விட்ட படத்தை தொடங்கிய இயக்குனர்