×

கமல் அமைத்த விபத்து தடுப்பு குழு

இந்தியன்-2 படபிடிப்பின்போது 3 பேர் உயிரிழந்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடக்கிறது. இந்நிலையில் கமல்ஹாசனின் ராஜ் கமல் பட நிறுவன அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இயக்குனர்கள் கே.எஸ்.ரவிகுமார், ஷங்கர், தயாரிப்பாளர்கள் டி.சிவா, எஸ்.ஆர்.பிரபு, பெப்சி சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

படப்பிடிப்பு தளங்களில் நடக்கும் விபத்துகளை தடுப்பது தொடர்பாக 4 மணி நேரம் ஆலோசனை நடந்தது. இதன் முடிவில் படப்பிடிப்பு தளங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 15-பேர் கொண்ட குழு அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது.

Tags : Accident prevention team ,Kamal ,
× RELATED கலைஞருக்கு கமல்ஹாசன் புகழஞ்சலி