×

இந்தியன் 2 விபத்து பீதியிலிருந்து மீளாத காஜல் அகர்வால்

இந்தியன் 2ம் பாகம் தொடங்குவதற்கு அறிவிக்கப்பட்டதிலிருந்தே அப்படத்திற்கு குழப்பங்கள் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்தியன் 2 படம் பூஜை போடப் பட்டு படப்பிடிப்பு தொடங்குவதற்கு மாதக் கணக்கில் படக்குழு காத்திருந்தது. படப்பிடிப்பு தொடங்கி கமல்ஹாசன் கலந்துகொண்ட நிலையில் திடீரென்று கமலுக்கு காலில் ஆபரேஷன் நடந்தது. இதையடுத்து அவர் 2 மாதம் படப்பிடிப் பில் பங்கேற்காமல் ஓய்வெடுத்தார். உடல்நிலை சரியான பின்னர் மீண்டும் கமல் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். வடநாட்டில் படப்பிடிப்பு நடந்தது.

அதன் தொடர்ச்சியாக சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈவிபி படப்பிடிப்பு தளத்தில் ஷூட்டிங் நடந்தது. அப்போதுதான் கிரேன் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட உதவி இயக்குனர் உள்பட 3 பேர் பலியானார்கள். இந்த விபத்தை நேரில் பார்த்திலிருந்து கதாநாயகி காஜல் அகர்வால் பீதியில் ஆழ்ந்திருக்கிறார். தனது பதற்றம் தணியும் வரை தன்னை படப்பிடிப்புக்கு அழைக்க வேண்டாம் என்று அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறதாம். இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்திருக்கிறது.

படப்பிடிப்பில் நடந்த விபத்து தற்போது பட குழுவினருக்குள் புகைச்சலை கிளப்பிவிட்டிருக்கிறது. படக்குழு என்பதைவிட ஹீரோ கமல்ஹாசன், பட நிறுவனம் லைகாவுக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டிருக்கிறது. விபத்துக்கு தயாரிப்பு நிறுவனம் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று லைகாவுக்கு கமல்ஹாசன் கடிதம் எழுத அதற்கு லைகா நிறுவனம், இயக்குனரும், ஹீரோவும் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று பதில் கடிதம் அனுப்பியது.

இந்த விவரம் தனிப் பட்ட முறையில் இல்லாமல் பொது வெளியில் பகிரப்பட்டதால் இருதரப்புக்கு மான மனக்கசப்பு அதிகரித்திருக்கிறது. இதற்கிடையில் சிபிசிஜடி விசாரணை இயக்குனர், தயாரிப்பாளர், ஹீரோ உள்ளிட்ட அனைவரிடமும் நடப்பதால் படப்பிடிப்பை குறிப்பிட்ட தேதியில் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே நடிகர், நடிகைகளிடம் பெறப்படட கால்ஷீட் தேதி முடிந்துவிட்டதால் மீண்டும் அவர்களிடம் புதிதாக கால்ஷீட் பெற்று அதை முறைப்படுத்திய பிறகே முழுமையான படப்பிடிப்பு தொடங்க வேண்டிய நிலை  ஏற்பட்டிருக்கிறது. இதனால் இந்தியன் 2 திட்டமிட்ட காலத்தில் வெளியாகுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. திடீரென்று சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டால் கமல் அரசியல் பணிகளை தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் அப்போது இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்குவதற்கான சூழல் மேலும் மோசடையும் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.

Tags : Kajal Aggarwal ,accident panic ,Indian ,
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...