×

நடிகர் சங்க தேர்தல் நடத்த பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை

நடிகர் சங்க தேர்தல் நடத்த பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலை 3 மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்துள்ளது. நடிகர் சங்கத்தை தனி அதிகாரி தொடர்ந்து நிர்வகிக்கலாம் என்று விஷால் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 8-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூன் 23-ம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. இதில் நடிகர் நாசர் தலைமையில் ‘பாண்டவர் அணி’யும், நடிகர் பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும்’ களமிறங்கியது. இதனிடையே தேர்தலை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்கச் சிறப்பு அதிகாரியாக பதிவுத்துறை உதவி ஐஜி கீதாவை தமிழக அரசு நியமித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஷால் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம்,  நடிகர் சங்க தேர்தல் ரத்து செய்து உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் புதிய தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல் தாஸ்  நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.  தனி நீதிபதியின் இந்த உத்தரவை ரத்து செய்து வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என நடிகர் விஷால் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் நடிகர் சங்க தேர்தல் நடத்த பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : election ,actor ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...