×

இனி பிரியாணி சாப்பிட மாட்டேன்; ராஷ்மிகா திடீர் முடிவு

பிரியாணியை பார்த்தால் ஒரு கட்டுகட்டும் நடிகர், நடிகைகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ராஷ்மிகா. குறிப்பாக ஐதராபாத் பிரியாணி என்றால் நாவில் எச்சில் ஊறிவிடும். படப்பிடிப்பில் எங்கிருந்தாலும் மதிய உணவில் பிரியாணி கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று அவர் உதவியாளரிடம் கண்டிஷனாக சொல்லி வைத்திருப்பதால் கம கம பிரியாணி பகல் 12 மணிக்கே செட்டிற்கு வந்துவிடும்.

என்ன ஆச்சோ, ஏது ஆச்சோ தெரியவில்லை, திடீரென்று ராஷ்மிகா பிரியாணி மட்டுமல்ல அசைவ உணவே இனி சாப்பிடுவதில்லை என்று சபதம் செய்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது,’ஆம், நான் முழுமையாக வெஜிடேரியன் ஆக மாறியிருக்கிறேன். தினமும் பிரியாணி என்றால் ருசித்து சாப்பிட தவறமாட்டேன். இனிமேல் பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவு எதுவும் சாப்பிடுவ தில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். இனிமேல் என் உணவு பழக்கம் வெஜிடேரியனாகவே தொடரும்’ என தெரிவித்திருக்கிறார் ராஷ்மிகா.

Tags : Rashmika Sudden End ,
× RELATED நடிகர் சித்தார்த் மற்றும் பாலிவுட்...