×

உத்திரமேரூரில் அரசின் வளர்ச்சி திட்ட பணிகள்; மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திடீர் ஆய்வு

உத்திரமேரூர்: உத்திரமேரூரில் அரசின் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர் சுப்பரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் உத்திரமேரூர் அடுத்த மலையாங்குளம் கிராமத்தில் இருளர் மற்றும் பழங்குடியின குடும்பங்களுக்கு கட்டப்பட்டு வரும் தொகுப்பு வீடுகள் மற்றும் உத்திரமேரூர் பேரூராட்சியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு பொது மருத்துவமனை ஆகியவற்றை பார்வையிட்டார். அப்போது, கட்டுமான பணிகள் தரமானதாகவும் விரைவில் முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் மக்களை தேடி மருத்துவம் மற்றும் இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட திட்டங்கள் செயல்படும் இடங்களிலும் ஆய்வு செய்தார். அப்போது காஞ்சி கலெக்டர் ஆர்த்தி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் உமாதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லோகநாதன், வரதராஜன், பேரூராட்சி செயல் அலுவலர் லதா, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயகாந்தி முரளிகார்த்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்….

The post உத்திரமேரூரில் அரசின் வளர்ச்சி திட்ட பணிகள்; மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Uttarmerur ,Suparamanian ,Utramarur ,Dinakaraan ,
× RELATED உத்திரமேரூர் அருகே சிறப்பு மருத்துவ முகாம்: எம்எல்ஏ பங்கேற்பு