×

ஜிப்ஸியில் தணிக்கை செய்த காட்சி வெளியீடு

ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா நடித்திருக்கும் ஜிப்ஸி தணிக்கையில் பெரும் போராட்டம் நடத்தி சான்றிதழ் பெற்று வெளியானது. பல முக்கிய காட்சிகளை தணிக்கை அதிகாரிகள் வெட்டி எரிந்தனர். இரு சமூகத்தினரிடையேயான மோதலை சித்தரிக்கும் படமாக உருவாகி இருக்கும் இது ஒரு வருடத்துக்கு முன்பே படமாக்கப்பட்ட காட்சியாக இருந்தாலும் சமீபத்தில் டெல்லியில் நடந்த கலவரத்தை பிரதிபலிப்பதாக இருப்பதாக விமர்சகர்கள் கணிக்கின்றனர்.

இதுகுறித்து ராஜூமுருகன்,’தணிக்கையில் வெட்டப்பட்ட காட்சிகளை இணைய தளத்தில் வெளியிட திட்டமிட்டிருக்கிறேன். அதில் பல சம்பவங்கள் அம்பலத்துக்கு வரும். தணிக்கை குழுவில் அரசியல் வாதிகள் உறுப்பினர்களாக இருக்ககூடாது’ என தெரிவித்தார்.

Tags : Gypsy ,
× RELATED கணவன், மனைவி ஈகோ கதையில் அஞ்சலி நாயர்