×

மாற்றுத்திறனாளி பெண்ணை வீடு புகுந்து பலாத்காரம்: யானை பாகன் கைது

திருச்சி: திருச்சியை சேர்ந்த 22 வயது மாற்றுத்திறனாளி பெண் (வாய்பேச முடியாதவர்), தனது பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். தஞ்சை மானம்புசாவடியை சேர்ந்தவர் வினோத்(40). இவர் திருச்சியில் தனியாருக்கு சொந்தமான யானை பாகனாக இருந்து வருகிறார். இவர் மாற்றுத்திறனாளி பெண் வசிக்கும் வீட்டுக்கு அருகில் தங்கியுள்ளார். கடந்த 22ம் தேதி இரவு மாற்றுத்திறனாளி பெண்ணின் பாட்டி, வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தார். அந்த நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து மாற்றுத்திறனாளி பெண்ணை மிரட்டி வினோத் பாலியல் பலாத்காரம் செய்தார்.இதைதொடர்ந்து பெண்ணின் வீட்டில் இருந்து பாகன் வினோத் வெளியே வந்தார். இதை அக்கம்பக்கத்தினர் பார்த்து பெண்ணின் பாட்டியை செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வீட்டுக்கு வந்து பேத்தியிடம் பாட்டி விசாரித்தார். அப்போது நடந்த சம்பவத்தை பேத்தி அழுதவாறு கூறினார். இந்த சம்பவம் குறித்து திருச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து வினோத்தை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். …

The post மாற்றுத்திறனாளி பெண்ணை வீடு புகுந்து பலாத்காரம்: யானை பாகன் கைது appeared first on Dinakaran.

Tags : Yanai Bagan ,Trichy ,Thanjavur ,Elephant Bagan ,Dinakaran ,
× RELATED திருச்சி-திண்டுக்கல் சாலையில் போலீஸ் வாகனம்-ஆட்டோ மோதல்