அருண் விஜய் ஜோடியாக ரெஜினா கெசன்ட்ரா

குற்றம் 23 படத்துக்கு பிறகு மீண்டும் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கிறார். அவருக்கு ஜோடி ரெஜினா. தவிர பகவதி பெருமாள், ஸ்டெபி படேல் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, பி.ராஜசேகர். இசை, சாம் சி.எஸ். தயாரிப்பு, விஜயராகவேந்திரா. டெல்லி, ஆக்ரா மற்றும் தாஜ்மஹாலில் படப்பிடிப்பு நடக்கிறது. கோலிவுட்டில் தனது 25-வது வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறார் அருண் விஜய்.

அந்த வகையில் அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மாஃபியா திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இத்திரைப்படத்தை அடுத்து அக்னி சிறகுகள், சினம் ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வரும் அருண் விஜய், ‘குற்றம் 23’ பட இயக்குநருடன் பெயரிப்படாத தனது 31-வது படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்காக அதிரடியான சண்டைக் காட்சிகளில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தவும் அருண் விஜய் தயாராகி வருகிறார்.

Related Stories: