கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி நடித்துள்ள படம், ராஜவம்சம். டி.டிராஜா தயாரிக்க, சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். படம் குறித்து சசிகுமார் கூறுகையில், ‘கூட்டுக்குடும்ப கலாச்சாரம்தான் நம் ஆணிவேர். இன்று அதை இழந்து வருகிறோம். கூட்டுக்குடும்பத்தின் மேன்மை பற்றி இளைய சமுதாயம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக உருவான இப்படத்தில் 40 முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.
அனைவரும் நிஜமான கூட்டுக்குடும்பமாக மாறி படத்தில் நடித்தனர். திட்டமிட்டு செயல்பட்டால், குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் படமெடுக்க முடியும் என்பதற்கு இப்படம் நல்ல உதாரணம். சினிமா துறையினர் ஒரே குடும்பமாக இருக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு’ என்றார்.