×

பாமக நிர்வாகி ஓடஓட விரட்டி படுகொலை

விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே பாமக பிரமுகரை மர்ம நபர்கள் ஓட, ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள கப்பியாம்புலியூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தனசேகர். இவரது மகன் ஆதித்தன் (35), பாமக மாவட்ட துணை தலைவராக இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் ஆதித்தன் விக்கிரவாண்டியில் இருந்து கோலியனூர் கூட்ரோடு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே எதிர் திசையில் பைக்குகளில் வந்த மர்மநபர்கள் ஆதித்தனை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். தப்பிச்சென்றபோதும் துரத்தி சென்று சரமாரியாக வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாதா, டி.எஸ்.பி பார்த்திபன் மற்றும் விக்கிரவாண்டி ேபாலீசார் கொலையான ஆதித்தன் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாதா கூறுகையில், முன்விரோத காரணங்களால் கொலை நடைபெற்றதா என்ற கோணங்களில் முதல் கட்ட விசாரணை தொடங்கியுள்ளோம். மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றார்….

The post பாமக நிர்வாகி ஓடஓட விரட்டி படுகொலை appeared first on Dinakaran.

Tags : Vikriwandi ,Bhamaka Pramuka ,Vikriwandi, Viluppuram district ,Bhamaka ,Executive ,Dinakaraan ,
× RELATED மனித மலம் கலக்கப்பட்டதாக கூறப்பட்ட...