×

கர்ப்பம் காரணமாக தமிழ் படத்தில் சமந்தா விலகல்?

நானும் ரவுடிதான் படத்தை தொடர்ந்து மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா இணையும் படம், காத்துவாக்குல ரெண்டு காதல். அனிருத் இசை அமைக்கும் இப்படத்தில் 2வது ஹீரோயினாக நடிக்க சமந்தா ஒப்பந்தமானார். இந்நிலையில், சமந்தா கர்ப்பம் அடைந்ததை தொடர்ந்து இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக தகவல் வெளியானது.

இதையறிந்து கடும் கோபமடைந்த சமந்தா, ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது போன்றும், 100 கிலோ வெயிட் தூக்குவது போன்றும் போட்டோக்களை வெளியிட்டு, கர்ப்பமாக இல்லை என்பதை அறிவித்தார்.

இதனிடையே காத்துவாக்குல ரெண்டு காதல் படக்குழுவினர், மீடியாக்களுக்கு போன் செய்து, ‘சமந்தா இப்படத்தில் இருந்து விலகவில்லை. விரைவில் அவர் நடிக்கும் காட்சிகள் சென்னையில் படமாக்கப்படுகிறது’ என்று தெரிவித்தனர். தன்னைப்பற்றி வதந்திகள் பரப்புவது ஒரு நடிகை என சமந்தா கண்டுபிடித்துள்ளாராம். அவர் யார் என்பதை அறியும் முயற்சியில் சமந்தா தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Samantha ,
× RELATED எல்லா பிரச்னைகளில் இருந்தும் விடுபட்டுள்ளேன்: சமந்தா மகிழ்ச்சி