×

பாலிவுட்டுக்காக எடையை குறைத்த விஜய் சேதுபதி

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் விஜய் சேதுபதி, தற்போது இந்தி படத்தில் நடிக்கிறார். ஆமிர்கான் நடிக்கும் லால் சிங் சட்டா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகும் அவர், தன் உடல் எடையை 25 கிலோ குறைத்துள்ளார். ஏற்கனவே ஆமிர் கான் தன் உடல் எடையை 21 கிலோ குறைத்திருக்கிறார்.

1994ல் ஹாலிவுட் நடிகர் டாம் ஹான்க்ஸ் நடிப்பில் வெளியாகி 6 ஆஸ்கர் விருதுகள் பெற்ற பாரஸ்ட் கம் என்ற படத்தின் இந்தி ரீமேக்காக லால் சிங் சட்டா உருவாகிறது. விஜய் சேதுபதி நடிப்பதால், இந்தியில் வெளியாகும் அதே நேரத்தில் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது.

Tags : Vijay Sethupathi ,
× RELATED 200 பேர் தயாரிக்கும் படத்தில் விஜய் சேதுபதி