×

மரணத்தில் முடிந்த ‘லிவ்-இன்’ வாழ்க்கை துர்நாற்றத்துடன் காதலி சடலம் மீட்பு; தலைமறைவான காதலன் அதிரடி கைது

மொராதாபாத்: உத்தரபிரதேசத்தை சேர்ந்த காதலன் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் லிவ் – இன் வாழ்க்கை வாழ்ந்த காதலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியில் காஜல் (24) மற்றும் தாரேஷ் (25) ஜோடி வசித்து வந்தது. தனியார் நிறுவனத்தில் தாரேஷ் பணியாற்றி வந்தார். அவரது காதலி காஜேல், கம்ப்யூட்டர் படிப்பு படித்து வந்தார். இவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் ‘லிவ்-இன்’ வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தாரேஷிடம் காஜல் வலியுறுத்தி உள்ளார். ஆனால் சாக்கு போக்கு காரணங்களை கூறி, அந்த பெண்ணுடன் தாரேஷ் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இதனால் மனமுடைந்த காஜல், வீட்டில் தனியாக இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது காதலன் தாேரஷூம் அங்கு வராததால், அந்த வீடு உள்தாழிட்டு பூட்டப்பட்ட நிலையிலேயே இருந்தது. இரண்டு நாட்களுக்கு மேலாக வீடு திறக்கப்படாததால், வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார், அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, காஜலின் சடலம் தூக்கில் தொங்கிய துர்நாற்றம் வீசியது. அதையடுத்து அந்த சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் எஸ்எஸ்பி ஹேம்ராஜ் மீனா கூறுகையில், ‘லிவ்-இன் வாழ்க்கை வாழ்ந்து வந்த ஜோடிக்குள் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணை தாரேஷ் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வந்துள்ளார். மேலும், அவருக்கு வேறொரு இடத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த காஜல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 4 நாட்களாக அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில் இருந்ததால், அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட காதலன் தாரேஷை கைது செய்து விசாரித்து வருகிறோம்’ என்று கூறினார். …

The post மரணத்தில் முடிந்த ‘லிவ்-இன்’ வாழ்க்கை துர்நாற்றத்துடன் காதலி சடலம் மீட்பு; தலைமறைவான காதலன் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Moradabad ,Liv-in ,Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED உத்தரப்பிரதேசம் அமேதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி தோல்வி