×

சிபிக்காக 11 முறை ஸ்கிரிப்ட் மாற்றிய இயக்குனர்

சிபி சத்யராஜ் நடிக்கும் படம் வால்டர். நட்டி, சமுத்திரக்கனி, ஷிரின் காஞ்ச் வாலா, ரித்விகா, யாமினி, சனம் நடிக்கின்றனர். ஸ்ருதிதிலக் தயாரிக்கிறார். பிரபுதிலக் தயாரிப்பு மேற்பார்வை. யு.அன்பு இயக்குகிறார். இப்படத்தில் நடித்ததுபற்றி சிபி கூறும்போது, ‘நாய்கள் ஜாக்கிரதை படத்திற்கு பிறகு எனக்கு திரையுலகில் நல்ல மாற்றம் கிடைத்திருக்கிறது.

வால்டர் படம் மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்தும். இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். பிறந்த குழந்தைகள் கடத்தப்படும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. அதுபோன்ற சம்பவத்தை மையமாக வைத்து இக்கதை உருவாகியிருக்கிறது. இப்படத்தை 5 வருடத்துக்கு முன் இயக்குனர் சொன்னார்.

பின்னர் 11 முறை இந்த ஸ்கிரிப்ட் மாற்றம் செய்யப்பட்டு தற்போது நல்ல படமாக உருவாகியிருக்கிறது. இம்மாதம் படம் வெளியாகிறது. தொடர்ந்து போலீஸ் கதையில் நடிப்பீர்களா என்கிறார்கள். நல்ல கதையாக இருந்தால் இடைவெளியிட்டு நடிப்பேன். என் அப்பாவுடன் சேர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறேன். மீண்டும் பொருத்தமான கதையாக வந்தால் இணைந்து நடிப்போம்’ என்றார்.

Tags : script modification director ,CP ,
× RELATED ஒடிசா மாநிலத்தில் 11 மாவட்டங்களில்...