×

கடலில் மாயமான மீனவர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரண உதவி; முதல்வருக்கு நன்றி

திருவொற்றியூர்: தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் பெனாயிராஜ் (42), மீனவர். இவரது மனைவி ரோஸி. இவர்களுக்கு, சபாஸ்டின் (16), ஜான்சன் (14) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். பெனாயிராஜ் கடந்த 9.10.2021 அன்று சக மீனவர்களுடன் விசை படகில் சென்று நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது, எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்து காணாமல் போனார். போலீசார் அவரது உடலை தேடியும் கிடைக்கவில்லை. இதனால், அவரது மனைவி ரோஸி மற்றும் 2 மகன்கள் ஆகிய 3 பேரும் வருமானம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில், கடலில் மீனவர் காணாமல் போனால் 7 ஆண்டுகள் வரை காத்திருக்காமல், 2 ஆண்டுகளுக்குள் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் கே.பி.சங்கர் எம்எல்ஏ, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்து, இதற்கான சட்ட திருத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று கூறினார். இதனிடையே, கடலில் காணாமல்போன பெனாயிராஜ் குடும்பத்தின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அவரது குடும்பத்திற்கு தமிழக மீன்வளத் துறை சார்பில் ரூ.2 லட்சம் நிவாரண நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. நிதியை பெற்றுக்கொண்ட பெனாயிராஜின் மனைவி ரோஸி, தனது 2 மகன்களுடன், திருவொற்றியூரில் கே.பி.சங்கர் எம்எல்ஏவை சந்தித்து, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கே.பி.சங்கர் எம்எல்ஏவுக்கும் நன்றி தெரிவித்தனர்.    …

The post கடலில் மாயமான மீனவர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரண உதவி; முதல்வருக்கு நன்றி appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur ,Benairaj ,Thandaiyarpet ,Tsunami ,Rosie ,Sabastine ,Johnson ,
× RELATED குரு பெயர்ச்சியை முன்னிட்டு...