×

இருமொழி படத்தில் பரத்

தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வரும் பரத், தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகும் லாஸ்ட் 6 ஹவர்ஸ் என்ற படத்தில் நடிக்கிறார். அவருடன் விவியா சன்த், அடில் இப்ராஹிம், அனுமோகன், தயாரிப்பாளர் அனூப் காலித் ஆகியோர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, சினு சித்தார்த். இசை, கைலாஷ் மேனன். படம் குறித்து இயக்குனர் சுனிஷ் குமார் கூறுகையில், ‘வெவ்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நான்கு இளைஞர்கள், தங்கள் அறிவைப் பயன்படுத்தி ஒரு திருட்டை செய்து, ஒரே நேரத்தில் மொத்தமாக செட்டிலாக தீர்மானிக்கின்றனர்.

அந்த திருட்டை 6 மணி நேரத்தில் செய்து முடிக்க திட்டமிடுகின்றனர். அப்போது அவர்கள் சந்திக்கும் எதிர்பாராத பிரச்னைகளால் வாழ்வா, சாவா என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுகின்றனர். திருட்டை வெற்றிகரமாக முடித்தார்களா? பிரச்னையில் இருந்து தப்பித்தார்களா என்பது கதை’ என்றார்.

Tags : Bharat ,
× RELATED பாரத் காஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் லாரிகள் ஸ்டிரைக்