×

பட வாய்ப்பு இல்லை; லண்டனுக்கு திரும்பும் நிகிஷா

தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்தவர் நிகிஷா படேல். குஜராத்தை சேர்ந்த இவர், லண்டனில் குடும்பத்துடன் வசித்து வந்தார். தெலுங்கில் கோமரம் புலி படத்தில் அவரை நடிக்க வைக்க லண்டனிலிருந்து அழைத்து வந்தவர் எஸ்.ஜே.சூர்யா. அந்த படத்துக்கு பிறகு பல படங்களில் நடித்தார். பெரும்பாலும் கவர்ச்சி வேடங்களில் நடித்துள்ளார். கடைசியாக மார்க்கெட் ராஜா படத்தில் நடித்தார். இப்போது கைவசம் அவருக்கு படங்கள் இல்லை.

சில மாதங்கள் ஐதராபாத்திலே தங்கியிருந்து பட வாய்ப்புகளுக்காக காத்திருந்தார். ஆனால் எதிர்பார்த்தபடி படத்தில் நடிக்க அவரை யாரும் அழைக்கவில்லை. இதனால் லண்டனுக்கே திரும்பி செல்ல அவர் முடிவு செய்துள்ளார். லண்டனில் அவரது அப்பாவுக்கு ஓட்டல் பிசினஸ் இருக்கிறது. அங்கு சென்று, அப்பாவின் ஓட்டலை கவனித்து கொள்ள அவர் முடிவு செய்திருக்கிறாராம்.

Tags : Nikisha ,London ,
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது