×

ஆடை வடிவமைப்பு, கட்டுமானத்துறை என கிராம இளைஞர்களுக்கு 120 பிரிவுகளில் தொழில் பயிற்சி

சென்னை:தமிழ ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை முதன்மை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் மூலம், கிராமப்புற பெண்கள், இளைஞர்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்துடன், ஊரக இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்குவதற்கான DDUGKY திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த DDUGKY திட்டத்தின் கீழ், 18 முதல் 32 வயதிற்குட்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில் சார்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி, நிலையான வருமானம் ஈட்டும் வகையில் பயிற்சி வழங்கப்படும்.இத்திட்டத்தின் கீழ் சுகாதார பராமரிப்பு, ஆயத்த ஆடை வடிவமைப்பு, கட்டுமானத்துறை, ஆட்டோமோட்டிவ், சில்லரை வணிகம், தளவாடங்கள், அழகுக்கலை, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் போன்ற எளிதில் வேலைவாய்ப்பு பெற இயலும் 120க்கு மேற்பட்ட தொழில் பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது.எனவே, இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்பும் இளைஞர்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ‘மகளிர் திட்டம்’ என்று அழைக்கப்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் அலுவலகத்தையோ அல்லது ஒவ்வொரு வட்டாரத்திலும் செயல்பட்டு வரும் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தையோ அணுகி விவரங்களை பெற்று பயிற்சியில் சேர்ந்து பயன் அடையலாம். இதற்காக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் நிறுவப்பட்டுள்ள வாழ்வாதார உதவி அழைப்பு எண் 155330-ஐ தொடர்பு கொண்டும் விவரங்களை கேட்டறியலாம். …

The post ஆடை வடிவமைப்பு, கட்டுமானத்துறை என கிராம இளைஞர்களுக்கு 120 பிரிவுகளில் தொழில் பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chief Secretary ,Tamil Rural Development and Rural Department ,Tamil Nadu ,State ,Garment ,Construction Department ,Dinakaran ,
× RELATED ஜூன் 11-ல் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை