×

காதல் போதும் சண்டை வேண்டாம்

அழகான காதலை உள்ளடக்கிய படமாக உருவாகிறது ‘பழகிய நாட்கள்’. மறக்க முடியாத நினைவுகள் பலரது வாழ்க்கையில் தொடர் கதையாக அமைவதுண்டு. அப்படியொரு மறக்க முடியாத காதலாக அமைந்த ஒரு ஜோடியின் கதையாக இப்படம் உருவாகிறது. இதுபற்றி இயக்குனர் ராம்தேவ் கூறும்போது, ‘இளம் வயது காதல் எவ்வாறு முடிகிறது. அதே பக்குவப்பட்ட காதல் வாழ்வை எப்படி உறுதிபடுத்துகிறது என்பதே கதை. இதில் சண்டை காட்சிகள் கிடையாது. 5 இனிமையான பாடல்கள் ஜான்.ஏ. அலெக்ஸிஸ், ஷேக் மீரா இசையில் இடம்பெறுகிறது.

‘காதல் ஒரு பேப்பர் போல் செட்டானா பறக்கும் மேல...’ என்ற பாடலுக்கு ஹீரோ மீரான் உடன் நாட்டுப்புற பாடகர் செந்தில்கணேஷும் நடனம் ஆடியிருக்கிறார். மேக்னா ஹீரோயின். ராம்தேவ் பிக்சர்ஸ் தயரிக்கிறது. மணிவண்ணன், பிலிப் விஜயகுமார் ஒளிப்பதிவு.  ஸ்ரீநாத் வின்சென்ட், ராய், சுஜாதா, நெல்லை சிவா, சிவகுமார், மங்கி ரவி ஆகியோர் நடிக்கிறார்கள். தேனி, சென்னை, கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் 45 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.

Tags :
× RELATED மீண்டும் காதலில் விழுவேன்: சொல்கிறார் ஸ்ருதிஹாசன்