×

தனுஷ் பாடலுக்கு வடிவேலு டான்ஸ்

இணைய தளத்தில் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு வேலை தருபவர் என்றால் அது வடிவேலுதான். அரசியல்வாதி முதல் சினிமா பிரபலங்கள்வரை யாரை வேண்டு மென்றாலும் கலாய்ப்பதென்றால் கூப்பிடு வடிவேலுவை என்று அவர் நடித்த படங்களின் காட்சிகளை எடுத்து மீம்ஸ் ஆக்கிவிடுகிறார்கள்.

தற்போது தனுஷுக்கு மீம்ஸ்போட பயன்பட்டிருக்கிறார் வடிவேலு. பட்டாசு படத்தில் சில் புரோ பாடலுக்கு வடிவேலுவை ஆட வைத்து மீம்ஸ் தயாரித்திருக்கின்றனர். வடிவேலுவின் இந்த சில் புரோ நெட்டில் வீடியோவாக வலம் வந்து பட்டய கிளப்பிக்கொண்டிருக்கிறது.

Tags : Vadivelu Dance ,Dhanush ,
× RELATED தனுஷ் தனது மகன் என வழக்கு தொடர்ந்தவர் மரணம்