×

பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் நடிகைகளை குறி வைத்து தாக்குவது ஏன்? ரவீணா டான்டன் தாக்கு

சாது, ஆளவந்தான் படங்களில் நடித்த ரவீணா டான்டன் தற்போது இந்தி படங்களில் நடிப்பதுடன் தமிழ், கன்னடத்தில் உருவாகும் கேஜிஎப் சேப்டர் 2 படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் தனது காடசி முடிவடைந்திருப்பதற்கு மகிழ்ச்சி வெளியிட்டார். மேலும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் நடிகைகள் பற்றி விமர்சிப்பவர்கள், அதேபோல் சர்ஜரிமேற்கொள்ளும் நடிகர்கள் பற்றி கண்டுகொள்ளாதது ஏன் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறும்போது,’பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார். மூக்கு அறுவை சிகிச்சை செய்தார். கன்னம் சீர்படுத்தினார், முக சுருக்கங்கள் போக்குவதற்காக போடோக்ஸ் ஊசி போட்டுக்கொள்கிறார் என்றெல்லாம் நடிகைகளை பற்றி இஷ்டத்துக்கு குறி வைத்து எழுதுகிறார்கள்.

இதனால் சம்பந்தப்பட்ட நடிகைகளின் மனம் எவ்வளவு வருத்தப்படும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. அதேசமயம் பல நடிகர்களும் பிளாஸ்டிக் சர்ஜரி, போடோக்‌ஸ் ஊசி பயன்படுத்தி இளமையையும், அழகையும் பராமரிக்கிறார்கள். அவர்களைப் பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை, விமர்சித்து எழுதுவதும் இல்லை. ஏன் இந்த பாரபட்சம். இவ்வாறு ரவீணா கூறினார்.

Tags : Actresses ,Attack Plastic Surgery ,Raveena Tandon Attack ,
× RELATED ஷூட்டிங் இல்லாததால் போட்டோ ஷூட் நடத்தும் நடிகைகள்