×

குதிரை தூக்கி வீசியதில் கார்த்தி காயம்?

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. குதிரை மீது சவாரி செய்யும் காட்சியில் நடித்தபோது அவரை குதிரை தூக்கி வீசியதில் விழுந்து அடிபட்டதாக தகவல் பரவியது. இதுபற்றி கார்த்தி தரப்பில் விசாரித்தபோது அப்படி எதுவும் நடக்கவில்லை என்று கூறினர்.

பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி என பல ஹீரோக்கள் நடிக்கிறார்கள். எல்லோருமே குதிரை சவாரி, வாள் சண்டை பயிற்சி பெற்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2 பாகமாக உருவாகவிருக்கும் இப்படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Tags : Karthi ,
× RELATED மோடியை வீட்டுக்கு அனுப்ப கை...