×

கிரிக்கெட் வீராங்கனை ஆனார் டாப்ஸி

முன்னாள் கிரிக்கெட் கேப்டன் டோனி, சச்சின் போன்ற கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை கதை திரைப்படமானது. அதைத் தொடர்ந்து குத்துச்சண்டை வீராங் கனை மேரி கோம் வாழ்க்கை கதையும் படமானது. மேரி கோம் வேடத்தில் பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார். அடுத்து பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை படமாகிறது. இதில் ஷ்ரத்தா கபூர் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். இதற்காக பேட்மின்டன் பயிற்சியும் பெற்றார். ஆனால் திடீரென்று படத்திலிருந்து விலகினார்.

இதையடுத்து பரிணிநிதி சோப்ரா இந்த வேடத்தை ஏற்றிருக்கிறார். இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் வாழ்க்கை தற்போது உருவாகிறது. மிதாலி வேடத்தில் டாப்ஸி நடிக்கிறார். இந்தப் படத்துக்கு சபாஷ் மித்து என பெயரிடப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்து உருவாகும் வீராங்கனைகள் கதையில் தற்போது புதியதாக இடம் பிடித்திருக்கிறது கர்ண மல்லேஸ்வரி படம்.

கடந்த 2000ம் ஆண்டு சிட்னியில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற மல்லேஸ்வரி வெண்கல பதக்கம் வென்று பெருமை சேர்த்தார். அவரது வாழ்க்கையும் தற்போது திரைப்படமாக உள்ளது. இதனை தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகனில் சஞ்சனா ரெட்டி இயக்க உள்ளார். கதை, இயக்குனர் எல்லாம் ரெடியாக இருக்கிறது. தற்போது ஹீரோயினைத்தான் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

Tags : Topsy ,hero ,
× RELATED பதினோரு விநாயகர்களின் பரவச தரிசனம்