நடிகர், டாக்டரை தொடர்ந்து இயக்குனருடன் லவ்? அனுஷ்காவை துரத்தும் காதல்

நடிகை அனுஷ்கா அமைதியானவர், பொறுமையானவர், நடிப்பு திறமை மிக்கவர் என்பது சக நட்சத்திரங்களின் கணிப்பு. அதனால் அவருக்கு சுவீட்டி என்று செல்லப்பெயர் வைத்திருக்கின்றனர். கடந்த 3 வருடமாக அனுஷ்கா நடித்த படங்கள் பெரிய வெற்றி பெற்றது. குறிப்பாக பாகுபலி அவரை பாலிவுட்டிலும் பிரபலப்படுத்தியிருக்கிறது. வெற்றி அவரை தொடர்ந்து வருவதுபோல் 3 வருடமாக காதல் கிசுகிசுவும் அவரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

பாகுபலி ஹீரோ பிரபாஷ் தொடங்கி, தொழில் அதிபர், டாக்டர், உறவுக்காரப் பையன் ஆகியோருடன் தொடர்புபடுத்தி அனுஷ்கா மீது ஏகத்துக்கு காதல் கிசுகிசுக்கள் வலம் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றை அனுஷ்கா மறுத்தாலும் கிசுகிசு ஓய்ந்தபாடில்லை.

தற்போது சூடான மற்றொரு தகவல் பரவியிருக்கிறது. தான் நடித்த படத்தை  இயக்கிய இயக்குனருடன் அனுஷ்கா காதல் கொண்டிருக்கிறாராம். இந்த இயக்குனர் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து செய்தவர் என்று கூறப்படுகிறது. திருமணம் பற்றி ஜோடியாக இருவருமே விரைவில் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories:

>