×

ஆண்டிபட்டி பேரூராட்சியில் பயன்பாடில்லாத நீர்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும்: சுப்புக்காலனி மக்கள் கோரிக்கை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பேரூராட்சி சுப்புக்காலனி தெருவில் பயன்பாடில்லாத நீர்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டிபட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். குறிப்பாக ஏழை, எளிய விவசாய மற்றும் நெசவாளர்கள் வசிக்கும் பகுதியாக 13வது வார்டு உள்ளது. இந்த பகுதியில் சுப்புக்காலணி தெரு மிகவும் பின்தங்கிய பகுதியாகும். எனவே, பேரூராட்சி கவுன்சிலர் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி இப்பகுதியில், 12 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதே சமயம் இந்த பகுதியில் தெருவின் நடுவே பயன்பாடு இல்லாமல் பல வருடங்களாக உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி, வாகனங்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளது. எனவே இந்த நீர்த்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும் என்றும் மேலும் தெருவின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களை தெருவில் ஓரமாக அமைக்க வேண்டும். கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் இதே நேரத்தில், இந்த பணிகளையும் மேற்கொண்டால், இப்பகுதி சிறந்த வாகன வசதி உள்ள பகுதியாக மாறும். மேலும், அவசர காலத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் சென்றுவர ஏதுவாக இருக்கும் என பொதுமக்கள் கூறுகின்றனர்….

The post ஆண்டிபட்டி பேரூராட்சியில் பயன்பாடில்லாத நீர்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும்: சுப்புக்காலனி மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Antibati Badrachi ,Subukalani ,ANTIPATTI ,Antipati ,Ramadrakshi ,
× RELATED தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?