ஸ்டைலிஷ் வில்லன் கவுதம்

துல்கர் சல்மான், ரிதுவர்மா, ரக்‌ஷன், நிரஞ்சனி அகத்தியன் ஜோடியாக நடிக்க ஸ்டைலிஷ் வில்லனாக இயக்குனர் கவுதம் மேனன் நடிக்கும் படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். தேசிங்கு பெரியசாமி இயக்கி உள்ளார். இப்படத்தில் நடித்ததுபற்றி கவுதம்மேனன் கூறும்போது,’என்னுடைய படங்களில் அவ்வப்போது ஓரிரு சீன்களில் நடிப்பேன். அதுவொரு கொண்டாட்டத்துக்காக. இப்போது நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வருகிறது.

அவற்றை வேண்டாம் என்று மறுக்கிறேன். இப்படத்தில் நடித்ததற்கு காரணம் இப்படத்தின் இயக்குனர் மற்றும் டீம். துல்கர் நல்ல கதைதான்தேர்வு செய்வார் என்பதுதெரியும். அதனால் கதை கேட்காமல் நடிக்க ஒப்புக்ெகாண்டேன்’ என்றார். ‘இப்படத்துக்கு முதுகெலும்பே கவுதம் மேனன் பாத்திரம்தான். அவரது இயக்கத்தில் என்றாவது ஒரு நாள் நடிக்க ஆசையாக இருக்கிறது என்றார் துல்கர் சல்மான்.

Related Stories:

>