×

இந்தியன் 2 விபத்து எதிரொலி; மாநாடு படக்குழுவினருக்கு காப்பீடு

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிக்கும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில், கிரேன் உடைந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியானார்கள். பலபேருக்கு படுகாயம் ஏற்பட்டது. தற்போது அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கொடூர விபத்து குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், ‘மாநாடு’ படப்பிடிப்பில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும்  காப்பீடு (இன்சூரன்ஸ்) வசதி செய்து கொடுத்துள்ளார், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது. இதில் பணியாற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் 30 கோடி ரூபாய் மதிப்புக்கான காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதன் பிரீமியம் தொகை ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து 7.8 லட்ச ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Tags : crash ,Indian ,film crews ,
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...