×

3வது முறையாக ராணுவ அதிகாரியாக விஷால்

இரும்புத்திரை, ஆக்‌ஷன் படங்களில் ராணுவ அதிகாரி வேடத்தில் விஷால் நடித்திருந்தார். இப்போது மூன்றாவது முறையாக அதே கேரக்டரில் அவர் நடிக்க இருக்கிறார். தனது விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் சக்ரா படத்தில்தான் அவர் மீண்டும் ராணுவ அதிகாரி வேடம் ஏற்றுள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஆனந்தன் இயக்குகிறார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் விஷால் ஜோடியாக ரெஜினா, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார்கள். ஜூனில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Tags : Vishal ,Army ,
× RELATED அரசியல் கட்சி தொடங்குகிறேன்: நடிகர் விஷால் அறிவிப்பு