×

நடிகை தற்கொலை விவகாரம்; எமி ஜாக்ஸன் கோபம்

மதராஸ பட்டணம் தொடங்கி 2.0 படம் வரை நடித்த நடிகை எமி ஜாக்ஸன் நடிப்பிலிருந்து ஒதுங்கி லண்டனில் வசித்து வருகிறார். காதலன் ஆன்டிரியாஸ் பனயியோட்டோவுடன் திருமணத்துக்கு முன்பே குழந்தை பெற்றுக்கொண்டார் எமி. குழந்தை பெற்ற பிறகு திருமணம் செய்து கொள்வேன் என்று அறிவித்தாலும் திருமணம் எப்போது நடக்கும் என்பது பற்றி எமி தெரிவிக்கவில்லை. இந்நிலையில் லண்டன் டிவி நடிகையும், தொகுப்பாளருமான கரோலின் பிளாக் என்பவர் சமீபத்தில் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

அவரது மரணத்தை குடும்பத்தினர் உறுதி செய்ததுடன்,’கடினமான சூழலில் எங்களது குடும்பத்தினர் இருக்கிறோம். இந்த நேரத்தில் லண்டன் பத்திரிகை, டிவிக்கள் எங்களது தனிபட்ட விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம்’ என கேட்டுக்கொண்டனர். ஆனாலும் கரோலின் பிரபலமானவர் என்பதால் அவரது தற்கொலை பற்றி வெவ்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.

இது நடிகை எமி ஜாக்ஸனை கோபம் அடையச் செய்துள்ளது. இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள மெசேஜில், ‘கரோலின் குடும்பத்தின் வாழ்க்கையை பாதிக்கும் வகையில் லண்டன் பத்திரிகைகளும், டிவிக்களும் அதுபற்றி எழுதியும் ஒளிபரப்பியும் வர்த்தகமாக்கிக்கொண்டிருக்கின்றன. அந்த செயலை உடனே நிறுத்த வேண்டும்’ என கடுமையான கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார் எமி.

Tags : Amy Jackson ,
× RELATED திருமணமாகாமல் அம்மா ஆனார் எமி ஜாக்சன்