×

சூப்பர் ஸ்டார் பங்கேற்ற மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி ஒளிபரப்பு தேதி அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்ற மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி மார்ச் 23-ம் தேதி இரவு 8.00 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக டிஸ்கவரி சேனல் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. நாட்டில் முதல் மற்றும் பெரிய தேசிய வன உயிரியல் பூங்கா  என்று பெருமை உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம்கார்பேட் பெற்றுள்ளது.  இதில், டிஸ்கவரி சேனல் குழுவினர் காடுகள் வளர்ப்பு, தண்ணீர் தேவை, வன  விலங்குகள் பாதுகாப்பு போன்றவை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்த, ‘மேன் வெர்சஸ் வைல்டு’ என்ற தொடரை வெளியிட்டு வருகின்றனர்.

இதில், பிரபலங்களை நடிக்க வைத்து வருகின்றனர். சமீபத்தில் இந்த நிகழ்ச்சிக்காக பிரதமர் மோடி காட்டுக்கு சென்று, தொடரின் இயக்குனரான பியர் கிரில்சுடன் சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து, இந்த சாதனையில் பங்கேற்ற நடிகர் ரஜினி காந்த்தும் ஒப்புக் கொண்டார். ஜிம்கார்பேட்டுக்கு பதிலாக கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் வனப்பகுதியை ரஜினி தனது படப்பிடிப்புக்கு தேர்வு செய்தார்.

காரணம், இந்த வனப்பகுதியின் முழு தன்மையும் ரஜினிக்கு நன்கு  தெரியும். பந்திப்பூர் வனம் கர்நாடக மாநிலத்தில் இருந்தாலும் தமிழகம்  மற்றும் கேரள மாநிலங்களை ஒட்டியுள்ளதால், படப்பிடிப்பு நடத்த வசதியாக  இருக்கும். இதற்கு, பந்திப்பூர் புலிகள் சரணாலய இணை இயக்குனர் பாலசந்திரனும் உதவிகள் செய்ய முன்வந்தார்.

படப்பிடிப்பிற்காக அடர்ந்த வன பகுதிக்குள் சென்ற ரஜினியுடன் பந்திப்பூர் வனப் பாதுகாப்பு அதிகாரிகள், ஊழியர்கள் உடன் சென்றனர். இரவு நேரத்தில் வன விலங்குகள் எப்படி வாழ்கிறது. அவைகள் எழுப்பும் ஒலி, உணவு தேடி அலையும் காட்சிகளை பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் இருந்து ரஜினி பார்த்துள்ளார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி டிஸ்கவரி தொலைக்காட்சியில் மார்ச் 23 ஆம் தேதி இரவு 8.00 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : announcement ,superstar ,
× RELATED சென்னையில் இருந்து நெல்லைக்கு...