×

மாதவனுடன் மேற்கத்திய பாடகி

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை படமாக உருவாகிறது ராக்கெட்டரி. இப்படத்தை இயக்கி, நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மாதவன். ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தில் மேற்கத்திய பாடகி மேரி சாண்ட்லர் ஹிக்ஸ் இணைந்திருக்கிறார். இந்த தகவலை சமூக வலை தள பக்கத்தில் உறுதி செய்திருக்கிறார் மாதவன்.  இந்த ஆண்டில் இப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Western ,singer ,Madhavan ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி...