×

19 நாட்களுக்கு பின் அனுமதி: கும்பக்கரை அருவியில் குவிந்து வரும் ஐயப்ப பக்தர்கள்

பெரியகுளம்: கும்பக்கரை அருவியில் 19 நாட்களுக்கு பின், குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் ஐயப்ப பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல், வட்டக்கானல் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தால் அருவிக்கு நீர்வரத்து இருக்கும். கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில், கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தது. இதனால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. இதனால் அருவியில் நீர்வரத்து சீரானது. இதையடுத்து, 19 நாட்களுக்குப் பின் அருவியில் குளிக்க வனத்துறை அதிகாரிகள் நேற்று அனுமதி அளித்தனர். இதனால் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் அதிகளவில் அருவியில் குளித்து செல்கின்றனர்….

The post 19 நாட்களுக்கு பின் அனுமதி: கும்பக்கரை அருவியில் குவிந்து வரும் ஐயப்ப பக்தர்கள் appeared first on Dinakaran.

Tags : Ayyappa ,Kumbakkarai Falls ,Periyakulam ,Kumbakkarai ,Theni ,Kumbakarai ,
× RELATED வத்தலக்குண்டு- பெரியகுளம் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் அவதி