×

மகாநடி இயக்குநர் இயக்கத்தில் பிரபாஸ்

பிரபாஸின் 21-வது படத்தை மகாநடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்க உள்ளார். இந்த படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாஹோ படத்திற்கு பிறகு ராதா கிருஷ்ண குமார் இயக்கும் படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். காதல் கதையாக உருவாகி வரும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இத்தாலியில் நடந்தது. பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

தற்போது அவர்களின் ரொமான்ஸ் காட்சிகள் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தெலுங்கு சினிமாத் துறையில் மிகப் பிரபலமான வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு துறையில் இது 50-வது ஆண்டு. இதை முன்னிட்டு நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படத்தை தாங்கள் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.

Tags : Prabhas ,Mahanadi Director ,
× RELATED பிரபாஸ் படத்தில் வில்லன் ஆனார் அரவிந்த் சாமி