×

தல பட டைட்டில் மாற்றம்?

அஜீத் நடித்து வரும் படம் வலிமை. எச்.வினோத் இயக்குகிறார். இப்படத்தின் தொடக்க விழா மிக வேகமாக நடந்தது. ஆனால் படப்பிடிப்பு ஒரு சில மாதங்கள் கழித்துத்தான் தொடங்கின. இதில் நடிக்க நயன்தாரா உள்ளிட்ட சில டாப் ஹீரோயின்களை அணுகியபோது கால்ஷீட் பிரச்னை காரணமாக கைகூடவில்லை. இன்னமும் ஹீரோயினை படக்குழு தேடிக்கொண்டிருக்கிறது.

பைனான்ஸ் பிரச்னை காரணமாக படப்பிடிப்பில் இடைவெளி ஏற்பட்டது. இதுதவிர அஜீத்குமாருக்கு படப்பிடிப்பில் நடித்தபோது விபத்து ஏற்பட்டு ரத்த காயம் ஏற்பட்டது. இவற்றை அபசகுணமாக படக்குழு பார்க்கிறதாம். இதையடுத்து படத்துக்கு தலைப்பை மாற்ற வேண்டும் என்று ஒரு சிலர் ஆலோசனை கூறி உள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.

Tags :
× RELATED மதுவுக்கு அடிமையாகி தடம் மாறும்...