×

இந்தோனேசியாவில் நிலநடுக்க பலி 268 ஆக உயர்வு

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால், பலி எண்ணிக்கை 268 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணம், சியாஞ்சூர் பகுதியில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.6 என பதிவாகியது. நில நடுக்கத்தினால் ஏராளமான வீடுகள், மருத்துவமனைகள், பள்ளி கட்டிடம் உள்பட பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. தலைநகர் ஜகார்த்தாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 268 ஆக உயர்ந்து உள்ளது. 151 பேர் மாயமாகி உள்ளனர். 1,089 பேர் காயமடைந்து உள்ளனர். இதில் 900 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இடிந்த கட்டிடங்களில் இரவு பகலாக மீட்பு பணிகள் நடக்கின்றன.இந்தியா துணை நிற்கும்: பிரதமர் மோடி டிவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘இந்தோனேசியா நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச் சேதம், பொருட் தேசங்களால் கவலை அடைந்துள்ளேன். இதில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்த் இரங்கல் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய வேண்டுகிறேன். இந்த துயரமான நேரத்தில், இந்தோனேசியாவுக்கு இந்தியா துணை நிற்கும்,’ என கூறியுள்ளார்….

The post இந்தோனேசியாவில் நிலநடுக்க பலி 268 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Indonesia ,Jakarta ,West Java, Indonesia ,
× RELATED இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்