×

எத்தனை தடை போட்டாலும் ஜல்லிக்கட்டை அழிக்க முடியாது: சசிகுமார் பேட்டி

சென்னை: பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ள படம், ‘காரி’. சசிகுமார், மலையாள நடிகை பார்வதி அருண், ஜேடி சக்ர வர்த்தி, ஆடுகளம் நரேன், நாகிநீடு, ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி நடித்திருக்கின்றனர். லலிதானந்த், ஹேமந்த் பாடல்கள் எழுதியுள்ளனர். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய, இமான் இசை அமைத்துள்ளார். ஹேமந்த் இயக்கி இருக்கிறார். வரும் 25ம் தேதி வரும் இப்படம் குறித்து சசிகுமார் கூறியதாவது: ஒரேமாதிரி கதையில், அதுவும் கிராமத்துப் படங்களில் நடிப்பது   பற்றியே கேட்கிறார்கள். கிராமத்துப் படங்களில்தான் அதிகமாக நடிப்பேன். எனது தயாரிப்பில் ஜல்லிக்கட்டு பற்றி படமாக்க முயற்சி செய்தேன். அது முடியவில்லை. இப்போது லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் அந்த ஆசை நிறைவேறியது. இதில் வில்லனாக நடித்த ஜேடி சக்ரவர்த்தி, நான் ரிஸ்க் எடுத்து நடித்த காட்சிகளைப் பார்த்துவிட்டு, ‘முதலில் பாதுகாப்பு ரொம்ப முக்கியம்’ என்று அறிவுரை சொன்னார். என்னுடன் நிஜ ஜல்லிக்கட்டு வீரர்கள் நடித்துள்ளனர். ஜல்லிக்கட்டை தடை செய்வதற்கு எத்தனை வழக்குகள் போட்டாலும் சரி, யாராலும் ஜல்லிக்கட்டு விளையாட்டை அழிக்க முடியாது. 18 வகை மாடுகள் பற்றி படத்தில் சொல்லியிருக்கிறோம். எனது படங்களில் அதிக பட்ஜெட்டில், அனைத்து தரப்பினருக்காக உருவான ஜல்லிக்கட்டு பற்றிய படம் இது. அடுத்த ஆண்டு மீண்டும் படம் இயக்குகிறேன்….

The post எத்தனை தடை போட்டாலும் ஜல்லிக்கட்டை அழிக்க முடியாது: சசிகுமார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Sasikumar ,CHENNAI ,S. Laxman Kumar ,Prince Pictures ,Parvathy Arun ,JD Chakra ,
× RELATED ஆருத்ரா மோசடி: திருவள்ளூர் கிளை இயக்குனரின் ஜாமின் மனு தள்ளுபடி