இரண்டு ஹீரோக்களுடன் மீண்டும் ஜோடி போட தமன்னாவுக்கு ஆசை

தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் கைநிறைய படங்களை வைத்துக்கொண்டு ஓய்வெடுக்க நேரமில்லாமல் பிஸியாக நடித்து வந்தார் தமன்னா. அவர் தெலுங்கில் நடித்திருக்கும், ‘தட் இஸ் மகாலட்சுமி’ என்ற படம் ரிலீஸ் ஆகாமல் முடங்கிக்கிடக்கிறது. இதுதவிர ‘ஃபோல் சுடியான்’, ‘சீட்டிமார்’ என்ற 2 தெலுங்கு படங்களில் மட்டுமே நடிக்கிறார். இந்நிலையில் பிரபல  ஹீரோக்களுடன் ஜோடி போட்ட நினைவுகளை அசைபோட்டுக்கொண்டிருக்கிறார்.

 

சமீபத்தில் ஆஸ்க் தமன்னா என்ற ஹேஷ்டேக்கின் மூலம் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார். அதில் ஒரு ரசிகர், ‘எங்க தலயுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிப்பீர்களா?’ என்று கேட்டிருக்கிறார். அதேபோல் சூர்யா ரசிகர் ஒருவரும் மீண்டும் சூர்யாவுடன் இணைவது எப்போது என்று கேட்டார்.  அதற்கு பதில் அளிக்கும் விதமாக அஜீத்துடன் வீரம் படத்தில் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட தமன்னா,’ஞாபகம் வருதே ஞாபகம் வருதே...’ என்று பாடி மீண்டும் வாய்ப்பு வந்தால் யார் வேண்டாம் என்பார்கள் என்பதுபோன்ற பதிலும் அளித்திருக்கிறார்.

அதேபோல் ‘சூர்யாவுடன் நடிப்பது என்பது எனது கனவு’ என குறிப்பிட்டிருக்கிறார். சூர்யாவுடன் ஏற்கனவே அயன் படத்தில் தமன்னா ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு பெரிய ஹீரோக்களுக்கு வலை வீசியிருக்கும் தமன்னாவுக்கு அவர் எண்ணியபடி வாய்ப்பு வருமா? என்று சில ரசிகர்கள் கமென்ட் பகிர்ந்திருக்கின்றனர். கல் எறிந்திருக்கிறார். வந்தால் காய் போனால் கல் அவ்வளவுதான் என மற்றொரு ரசிகர் கமென்ட் பகிர்ந்திருக்கிறார்.

Related Stories:

>