×

ஸ்ரேயாவை தேடும் சீனியர் ஹீரோக்கள்

ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், விக்ரமுடன் கந்தசாமி என ஸ்டார் ஹீரோக்களுடன் ஜோடிபோட்ட ஸ்ரேயா ஒரு கட்டத்தில் படங்கள் எதுவும் இல்லாமல் கையை பிசைந்துகொண்டிருந்தார். பிறகு ஆண்ட்ரு நிபோன் என்பவரை மணந்தார். அவருடன் உலகம் சுற்றும் வாலிபி ஆன ஸ்ரேயா பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்தார். வெளிநாடு சுற்றி களைத்துப்போன நிலையில் மீண்டும் நடிப்பு பக்கம் கவனத்தை திருப்பினார். ஏற்கனவே இவர் நடித்துள்ள நரகாசூரன் படம் பிரச்னை காரணமாக திரைக்கு வரவில்லை.

தற்போது சண்டக்காரி படத்தில் நடித்து வருகிறார். சீனியர் நடிகர்களுடன் நடிக்க பல ஹீரோயின்கள் தயக்கம் காட்டும் நிலையில் ஸ்ரேயா மட்டும் நடிக்க சம்மதிக்கிறார். இதனால் வேறு நடிகைகளுக்கு இந்த வாய்ப்பு சென்றாலும் கடைசியில் ஸ்ரேயாவை தேடி வரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தெலுங்கில் என்.டி.பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்க சோனாக்‌ஷி சின்ஹா, கேத்ரின் தெரசா நடிக்க மறுத்த நிலையில் தற்போது அந்த வாய்ப்பு ஸ்ரேயாவுக்கு சென்றிருக்கிறது.

அதேபோல் டாக்டர் ராஜசேகருக்கு ஜோடியாக நடிக்க இளம் ஹீரோயின்கள் யாரும் சம்மதிக்காததால் அந்த வாய்ப்பும் ஸ்ரேயாவுக்கு வந்திருக்கிறது. இரண்டு படங்களையும் அவர் ஏற்பார் என்று தெரிகிறது. இதற்கிடையில் பேஷன் ஷோ நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கவர்ச்சி உடைகளில் கேட்வாக் நடை நடக்கிறார் ஸ்ரேயா. சமீபத்தில் அதுபோன்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஸ்ரேயா, காஸ்டியூம் டிசைனரின் மடியில் அமர்ந்து அவரை இறுக்கமாக கட்டி அணைத்துக்கொண்டிருக்கிறார். இப்படங்கள் நெட்டில் வைரலாகி வருவதுடன் கொடுத்து வைத்த காஸ்டியூமர் என்று ரசிகர்களின் கமென்ட்டையும் பெற்றிருக்கிறது.

Tags : heroes ,Shreya ,
× RELATED பிரைம் வாலிபால் லீக் தொடர் இறுதி...