×

கத்தாரில் சூரி

காமெடி நடிகர் சூரி ஹீரோவாக நடிக்க வாய்ப்பு வந்தாலும், ‘ஏன்,  நான் நல்லாயிருக்கறது பிடிக்கலையா?’ என்று தட்டிக் கழித்து நகைச்சுவை வேடங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்தார். இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் சூரி ஹீரோவாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். தனுஷ் நடித்த அசுரன் படத்தை இயக்கிய வெற்றிமாறன் அடுத்த படமாக சூரி படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.

வெளிநாட்டில் வேலைக்கு சென்று துன்பத்தை அனுபவிக்கும் தமிழர்கள் பற்றி எழுதப்பட்ட அஜ்னபி என்ற நாவலின் பின்னணியில் இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறதாம். இதனால் இயக்குனருடன் நடிகர் சூரி கத்தார் நாட்டுக்கு செல்லவிருக்கிறாராம். அவர்கள் இருவருக்கும் பாஸ்போர்ட், விசா எடுக்கும் பணியை தயாரிப்பு நிறுவனம் செய்து வருகிறதாம்.

Tags : Suri ,Qatar ,
× RELATED கத்தார் செய்தி சேனலுக்கு தடை: இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு