×

தீ இவன்

மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் படம், தீ இவன். ரோஜா மலரே, அடடா என்ன அழகு ஆகிய படங்களை இயக்கியவரும், சிந்துபாத்  படத்தை தயாரித்தவருமான டி.எம்.ஜெயமுருகன் கதை, திரைக்கதை, வசனம்,  பாடல்கள் எழுதி இசை அமைத்து இயக்குகிறார்.

கார்த்திக், சுகன்யா, ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, அஸ்மிதா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஒய்.என்.முரளி. பின்னணி இசை, அலிமிர்சாக். அண்ணன் - தங்கை பாசத்தின், உறவின் பின்னணியில் கொங்கு சீமை மக்களின் வாழ்வியலை சொல்கிற படம். படப்பிடிப்பு பொள்ளாச்சி, திருப்பூர், கோவை, ஊட்டி ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.

Tags : Fire Ivan ,
× RELATED நடிகர் சித்தார்த் மற்றும் பாலிவுட்...