அனுஷ்கா கழுத்தை நீட்டபோவது யாருக்கு?

நடிகை அனுஷ்கா சைலன்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். அவர் சைலன்ட்டாக இருந்தாலும் அவரைப்பற்றிய கிசுகிசு ஓய்ந்தபாடில்லை. பிரபாஸை காதலிக்கிறார் என்ற வதந்தி ஓய்வதற்கு முன்பே குடும்பத்தினர் அவருக்கு வேறு மாப்பிள்ளை பார்ப்பதாக தகவல் வெளியானது. கடைசியாக டாக்டரை திருமணம் செய்யப்போகிறார் என்று கிசுகிசு பரவியது.

இதுகுறித்து அனுஷ்கா கூறும்போது,’என் மீது ஏன் இப்படி குறிவைக்கிறார்கள் என்று தெரியவில்லை. உடன் நடிக்கும் நடிகரை காதலிப்பதாக கூறினார்கள். பின்னர் தொழில் அதிபரை மணக்கப்போகிறேன், வக்கீலை மணக்கப்போகிறேன் என்றார்கள்.

கடைசியாக டாக்டரை மணக்க உள்ளதாக எழுதுகிறார்கள். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் சென்றாலும் பிறர் சொல்லி கேள்விப்படும்போது மனம் வருத்தமாக இருக்கிறது. எனது திருமண விஷயத்தை பொறுத்தவரை என் குடும்பத்தினர் யாரை மாப்பிள்ளை என்று காட்டுகிறார்களோ அவருக்கு கழுத்தை நீட்வேன்’ என்றார்.

Related Stories:

>