×

நாசரேத் வாரச்சந்தை விரிவாக்கம் செய்யப்படுமா? வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நாசரேத் : நாசரேத் வாரச்சந்தையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வியாபாரிகள், பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். நாசரேத் – சாத்தான்குளம் செல்லும் சாலையில் நாசரேத் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இதில் உள்ள கடைகள் மற்றும் இடத்தை நாசரேத் பேரூராட்சி நிர்வாகம்  பராமரித்து வருகிறது. இந்த வாரச்சந்தை, செவ்வாய்க்கிழமையில் கூடும். நாசரேத் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த சந்தைக்கு வந்து பொருட்கள் வாங்கி செல்கின்றனர். சமீப காலமாக சாத்தான்குளம், உடன்குடி, திசையன்விளை, தட்டார்மடம், நாசரேத் மற்றும் சுற்றுவட்டார வியாபாரிகளும் இங்கு கடை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். நாசரேத் வாரச்சந்தையின் உள்பகுதியில் 75க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு இடம் கிடைக்காமல் சந்தை நடைபெறும் நாளில் சந்தையின் வெளியே வியாபாரிகள் பலரும் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்கின்றனர். சந்தை வியாபாரம் பெருகி மக்கள் வரத்து அதிகமாக உள்ளதால் சந்தை உள்ளே காலியாக உள்ள இடங்களில் கூடுதலாக கடை கட்ட நடவடிக்கை எடுப்பதுடன் அதனை விரிவாக்கம் செய்ய வேண்டுமென வியாபாரிகள், பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து ஆழ்வார்திருநகரி வட்டார மதிமுக செயலாளர் ரஞ்சன் கூறுகையில்,நாசரேத்தின் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை, 1872ம் ஆண்டு தனது பயணத்தை தொடங்கி 150வது ஆண்டில் பயணிக்கிறது. 1990ம் ஆண்டு சில ஆயிரங்களில் ஆண்டு ஏலமாக போனச் சந்தை, தற்பொது ₹15 லட்சத்தை எட்டி இருக்கிறது. கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்கள் இச்சந்தையை பயன்படுத்தி வருகின்றனர். காலை 6:30 மணிக்கு தொடங்கும் சந்தை, இரவு 10 மணி வரை நடக்கும். இச்சந்தை இடப் பற்றாக்குறையால் தடுமாறிக் கொண்டு இருக்கிறது.சந்தை வீதியின் இருபுறமும் அமைக்கப்படும் கடைகளால், பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். சாத்தான்குளம், உடன்குடிக்கு செல்லும் பஸ்கள் மற்றும் வாகனங்கள், மக்கள் நெருக்கடியில் சிக்கித் திணறுகின்றன. நாசரேத் பேரூராட்சி மன்றம், இந்த இடப்பற்றாக்குறைக்கு தீர்வு காண வேண்டும், என்றார். நாசரேத் வணிகர் சங்க செயலாளர் செல்வன் கூறுகையில், சுற்றுவட்டார மக்கள் சந்தைக்கு வந்து செல்வதால் வியாபாரமும் கூடி வருகிறது. இடம் பற்றாக்குறையால் இங்கு வரும் வியாபாரிகள் சாலை பகுதியில் கடை அமைக்கின்றனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் கவனித்து சந்தையை விரிவாக்கம் செய்யும் வகையில் கூடுதல் கடைகள் கட்ட வேண்டும், என்றார். …

The post நாசரேத் வாரச்சந்தை விரிவாக்கம் செய்யப்படுமா? வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Nazareth Varachanda ,Nazareth ,Nazareth Vachanda ,
× RELATED பாட்டக்கரை ஆலயத்தில் விபிஎஸ் வகுப்பு நிறைவு