×

கோவாவில் ஷூட்டிங்கிற்கு கட்டுப்பாடு

தமிழ்,  தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிப் படங்கள் கோவா கடற்கரை பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் ஜெய், பியா நடித்த கோவா என்ற படமும் கோவாவில்தான் படமாக்கப்பட்டது. அழகிய லொகேஷன்  என்று திரையுலகினரால் கோவா வர்ணிக்கப்பட்டாலும் திரைப்படங்களில் காட்டும்போது அங்குதான் போதை மருந்து விற்பனை, விபசாரம் போன்ற சட்டவிரோத செயல்கள்  நடப்பதுபோல் சித்தரிக்கப்படுகிறது.

இது கோவா அரசின் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து கோவாவில் படப்பிடிப்பு நடத்த அம்மாநில அரசு கட்டுப்பாடு  விதித்திருக்கிறது. இனி கோவாவில் படப்பிடிப்பு நடத்த வேண்டுமென்றால் அரசு அமைத்துள்ள குழுவில் படத்தின் ஸ்கிரிப்டை காட்டி ஒப்புதல் பெற வேண்டும். அதன்பிறகே படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்படும் என அரசு புதிய கட்டுப்பாடு விதித்திருக்கிறது. கோவாவில் சட்டவிரோத செயல்கள்  நடைபெறுவதுபோல் காட்டினால் அதற்கு அனுமதி தரப்படாது என கூறப்படுகிறது.

Tags : shooting ,Goa ,
× RELATED மசூதி மீது அம்பு விடுவது போன்ற சைகை...