×

விவாகரத்துக்கு யார் காரணம்? நடிகை அமலாபால் பதில்

நடிகை அமலாபால் இயக்குனர் ஏ.எல்.விஜய் காதலித்து மணந்தனர். ஒரு சில ஆண்டுகளில் மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். தற்போது அமலாபால் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அமலாபால், விஜய் விவாகரத்துக்கு  நடிகர் தனுஷ் தான் காரணம். அவர்தான் அமலாபால் நடிப்பதற்கு திருமணத்துக்கு பிறகு வாய்ப்பளித்தார் என விஜய்யின் தந்தை ஏ.எல்.அழகப்பன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாருக்கு அமலாபால் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: விவாகரத்து விவகாரம் தேவையில்லாத ஒன்று. அது எனது தனிப்பட்ட விஷயம். நான் விவாகரத்து பெற்றதற்கு வேறு யாரும் காரணம் இல்லை. தனுஷ் எனது நலம்விரும்பி. எனது 2வது திருமணம் பற்றி கேட்கிறீர்கள், அதற்கு நீண்ட காலம் ஆகும். விரைவில் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Amalapal ,
× RELATED அண்ணனை கொலை செய்தவர் பழிக்குப்பழி...