×

சம்பளம் வாங்காமல் நடித்த படத்தில் ஹீரோயின் உதட்டை கவ்விய ஹீரோ

‘அட்டு’ படத்தில் ஹீரோவாக நடித்த ரிஷி ரித்விக் நடிக்கும் புதியபடம் மரிஜுவானா. ஆஷா ஹீரோயின். எம்.டி.விஜய் தயாரிப்பு. கார்த்திக் குரு இசை. எம்.டி.ஆனந்த் இயக்கி உள்ளார். படத்தின் இசை, டிரெய்லர், பாடல் வெளியிடப்பட்டது. கே.பாக்யராஜ், கே.ராஜன், மிஷ்கின், ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் திரையிடப்பட்ட பாடல் காட்சியில் ரிஷி, ஆஷா ஜோடியின் முத்தக்காட்சி, படுக்கை அறை மற்றும் குளியல் காட்சிகள் இடம்பெற்றன.

ஒரு காட்சியில் ஹீரோயின் உதட்டை ரிஷி கவ்வி இழுப்பதுபோன்ற காட்சியும் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மேடைக்கு வந்த ஹீரோ ரிஷி வெட்கத்துடன் குனிந்தபடி அமர்ந்திருந்தார். அவரைத் தொடர்ந்து வந்த ஆஷா நெஞ்சை நிமிர்த்தியபடி வந்து அங்கிருந்த விஐபிகளிடம் கைகுலுக்கினார். ரிஷி பேசும் போது,’மரிஜுவானா படம் கஞ்சா காரணமாக சமுதாயத்துக்கு ஏற்படும் பாதிப்பைபற்றிய கதை.

இங்கு திரையிட்ட  நெருக்கமான பாடல் காட்சியை பார்த்து படத்தை தவறாக எண்ண வேண்டாம். அது வர்த்தக யுக்தி. இப்படத்தை எல்லோரும் பார்க்க வேண்டும். சமுதாய கருத்துள்ள படம் என்பதால் சம்பளமே வாங்காமல் நடித்தேன்’ என்றார். பிறகு பேசிய ஆஷா,’என்னையும் ரிஷியையும் எங்கள் போக்குக்கு நடிக்க விட்டுவிட்டார் இயக்குனர். ஒவ்வொரு காட்சியில் நடிக்கும்போதும் ரிஷி  பயப்படாதீர்கள் என்று தைரியம் கொடுத்தார். நானும் தைரியமாக நடியுங்கள் என்று ஹீரோவுக்கு தைரியம் சொன்னேன்’ என்றார்.

Tags :
× RELATED அக்கரன் விமர்சனம்