×

ஆஸ்கர் படம் மீது வழக்கு எப்போது?

சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆஸ்கர் விருதுகள் சமீபத்தில் வழங்கப்பட்டன. இதில் தென்கொரிய படமான பாராசைட் படம் சிறந்த படத்துக்கான விருது பெற்றது. இப் படம் தமிழில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியான விஜய்யின் மின்சார கண்ணா படத்தை பார்த்து காப்பி அடிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து பாராசைட் படம் மீது வழக்கு தொடர உள்ளதாக பரபரப்பு எழுந்துள்ளது.

கமல்ஹாசன், பிரபுதேவா நடித்த காதலா காதலா படத்தை தயாரித்தவர் பி.எல்.தேனப்பன். அவரிடம்தான் தற்போதைக்கு மின்சார கண்ணா படத்தின் உரிமை இருக்கிறது. ஹாலிவுட் மீது வழக்கு தொடர உள்ளதாக அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அவர் மேலும் கூறும்போது,’காதலா காதலா படத்தை நான் தயாரித்தேன்.

இப்படத்தை 10 வருடம் கழித்து இந்தியில் ஹவுஸ்புல் என்ற பெயரில் சாஜித் கான் இயக்கியிருந்தார். இதையடுத்து அவர் மீது வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கு இன்னும் கோர்ட்டில் நடந்துகொண்டிருக்கிறது. இம்முறை நான் எனது நெருங்கிய நண்பராக இருக்கும் வெளிநாட்டு வழக்கறிஞர் ஒருவரை அணுகி உள்ளேன். அவர் மூலம் வழக்கு தொடர்வதுபற்றி முடிவு செய்வேன்’ என்றார்.

Tags : Oscars ,
× RELATED 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மேடையில் ஜான்சீனா…!