×

மருத்துவக் கழிவு ரகசியம் சொல்லும் கல்தா

தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்து  விடவும் ஆகிய படங்களை தொடர்ந்து ஹரி  உத்ரா இயக்கியுள்ள படம், கல்தா. மேற்குத்தொடர்ச்சி மலை ஆண்டனி, ஐரா,  திவ்யா, கஜராஜ், ராஜசிம்மன்  நடித்துள்ளனர். படம் குறித்து ஹரி உத்ரா கூறியதாவது: அண்டை மாநிலங்கள் தமிழ்நாட்டை தங்களுடைய குப்பைத்தொட்டியாக நினைத்து, அவர்களுடைய மருத்துவக்கழிவுகளை சட்டவிரோதமாகவும், திருட்டுத்தனமாகவும் இங்கு கொண்டு வந்து கொட்டுகின்றன.

இதற்கு சில அரசியல்வாதிகள் உடந்தையாக இருக்கின்றனர். இதனால் இங்கு வசிக்கும் மக்கள் உடல்ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். தாங்கள் எதனால் பாதிக்கப்பட்டோம் என்றுகூட தெரியாமல் அறியாமையில் மூழ்கியிருக்கும் மக்கள், கடைசியில் என்ன செய்தார்கள் என்பது கதை.

Tags :
× RELATED யுவன் சங்கர் ராஜாவின் மணி இன் தி பேங்க்